தங்கள் நாட்டில் நுழைந்த இஸ்ரேல் உளவாளிகள் அனைவரையும் கைது செய்ததாக ஈரான் அறிவித்துள்ளது.

உலகின் மிகவும் சக்தி வாய்ந்த உளவு அமைப்பாக இருப்பது இஸ்ரேலின் மொஸாட். இந்த அமைப்பின் உளவாளிகள் ஈரான் மாகாணம் குர்திஷ்தான் வழியாக நுழைந்ததாகவும், அவர்கள் அனைவரையும் கைது செய்துவிட்டதாகவும் ஈரான் தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாகவும், அவர்களிடம் இருந்து ஆயுதங்கள், வெடிபொருட்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளதாகவும் ஈரானிய அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இதுதொடர்பாக அந்நாட்டு அரசு ஊடகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த அமைப்பின் உறுப்பினர்கள் இஸ்ரேலின் மொஸாட் உளவு நிறுவனத்துடன் தொடர்பு கொண்டிருந்தனர் என தெரிவித்துள்ளது.

ஆனால், மொத்தம் எத்தனை பேர் கைது செய்யப்பட்டனர், அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிவிக்கப்படவில்லை.இந்த விடயம் தொடர்பாக மொஸாட்டை கண்காணிக்கும் இஸ்ரேலிய பிரதமர் அலுவலகம் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.