தளம்
பிரதான செய்திகள்

படுத்து இருந்தவருக்கு பொலிஸ் வலை

ஜனாதிபதி மாளிகையை போராட்டக்காரர்கள் ஜூலை 9 ஆம் திகதியன்று கைப்பற்றியிருந்தனர். அதன்பின்னர் அங்கு பல்வேறான செயற்பாடுகளிலும் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில், ​போராட்டக்காரர்களில் ஒருவர், ஜனாதிபதி கொடியை கழற்றி, அதனை அங்கிருந்த கட்டிலில் மேற்போர்வையாக விரித்து, அதன் ​மேல் படுத்திருந்தார்.

அதனை வீடியோவாக ஒளிப்பதிவு செய்து சமூக வலைத்தளங்களிலும் பதவியேற்றியிருந்தார். அதற்கு குரலும் கொடுத்திருந்தார்.

அதில் அவர், ” நான் ஜனாதிபதியின் கொடியை, கட்டிலில் விரித்து படுத்து இருக்கின்றேன். எனக்கு கீழேயே கொடி இருக்கின்றது. ஆகையால், அவர் வீட்டுக்குப் ​போகவேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.

இந்தக் கொடியை எடுத்துக்கொண்டு போய், ஏரிப்பேன் என்றும் அவர் தெரிவித்தார்.

அவரை தேடியே பொலிஸார் வலைவிரித்துள்ளனர்

Related posts

இலங்கை ரூபாயின் மதிப்பு முறையாக பேணப்பட வில்லை.!

Fourudeen Ibransa
2 years ago

வட மாகாண ஆளுநராக ஜீவன் தியாகராஜா நியமனம்!

Fourudeen Ibransa
3 years ago

அடுத்த ஆண்டு பாரதூரமான மின்சார நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும்…!

Fourudeen Ibransa
1 year ago