நீதிமன்ற உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ரதிந்து சேனாரத்ன என்ற ரெட்ட கோட்டை நீதவான் நீதிமன்றினால் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு மத்திய பிரிவின் குற்றவியல் விசாரணை பிரிவினால் ரதிந்து சேனாரத்ன நேற்று கைது செய்யப்பட்டிருந்தார்.

மே மாதம் 21 ஆம் திகதி கொழும்பு வங்கி வீதி பிரதேசத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது நீதிமன்ற உத்தரவை மீறிய சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பின்னர் கொழும்பு குற்றவியல் பிரிவினரால் அவரிடம் நேற்று சுமார் மூன்று மணித்தியாலங்கள் வாக்குமூலம் பெறப்பட்ட நிலையில் சந்தேகநபருக்கு எதிராக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றினால் நேற்று வௌிநாட்டு பயணத்தடை உத்தரவொன்றும் பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது