தளம்
பிரதான செய்திகள்

பாராளுமன்றத்தின் மாதாந்த மின் கட்டணம் எவ்வளவு தெரியுமா?

பாராளுமன்றத்தின் மாதாந்த மின் கட்டணம் 60 இலட்சம் ரூபாவை அண்மித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும, இன்று (20) தெரிவித்தார்.

பாராளுமன்றத்தின் மாதாந்த மின்சாரக் கட்டணம் 60 இலட்சம் ரூபாய் எனவும், அதனைக் குறைக்கும் வகையில் சூரிய மின்கலங்கள் மூலம் மின்சாரம் பெறும் முறை தயாரிக்கப்பட வேண்டுமெனவும் குறிப்பிட்டார்.

அதற்குப் பதிலளித்த மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, பாராளுமன்றத்தில் 60 இலட்சம் ரூபாய் மின்சாரக் கட்டணத்தை செலுத்துவதற்குப் பதிலாக சூரிய ஒளி மின்சார அமைப்பை ஏற்படுத்துவது அவசியமானது.

எவ்வாறாயினும், அதற்கான பணத்தை தமது அமைச்சு வழங்க முடியாது எனவும், தேவைப்பட்டால் தொழில்நுட்ப ஆதரவை வழங்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

இரட்டை குடியுரிமை கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலக வேண்டும்…!

Fourudeen Ibransa
2 years ago

டயானா செல்லுபடியான வீசாவை வைத்துள்ளாரா….?

Fourudeen Ibransa
1 year ago

ரணிலின் ஏழு நிமிட உரை நாட்டின் பலரையும் அவரை திரும்பி பார்க்க வைத்துள்ளது.!

Fourudeen Ibransa
2 years ago