தளம்
மருத்துவம்

அடிக்கடி தலைவலி வருதா?

தலைவலி ஏற்பட்டால் எந்தவொரு வேலையையும் செய்ய முடியாது. தலைவலி வரும் போதெல்லாம் சிலர் மருந்து, மாத்திரைகளை சாப்பிடுவார்கள்.

ஆனால் அடிக்கடி சாப்பிட்டால் பின்னாளில் பக்கவிளைவுகளை ஏற்படுத்திவிடும். மேலும் சிலர் தைலம் தேய்த்து கொண்டே இருப்பார்கள்.

தலைவலி குணமாக எளிதான பாட்டி வைத்தியங்கள் இருக்கின்றன.

கொதிக்கும் தண்ணீரில் கோப்பி கொட்டையை போட்டு நன்றாக கொதிக்க வைத்து ஆவி பிடித்தால் தலைவலி பறந்து போகும்.

வெற்றிலைச் சாறு எடுத்து அதில் கற்பூரம் போட்டு நன்றாக குழைத்து நெற்றியில் பூசவும் தலைவலி குணமாகும்.

கிராம்பு, சீரகம் ஆகியவற்றை தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க வைத்து அந்த தண்ணீரை வடிகட்டி குடித்தால், சூட்டினால் ஏற்படும் தலைவலி குணமாகும்.

கிராம்பை எடுத்து சிறிது தண்ணீரில் போட்டு ஊற வைத்து பின்பு, மை போன்று அரைத்து நெற்றியில் பூசினால் தலைவலி குணமாகும்

தலைவலி குறைய கடுகுத்தூள், அரசி மாவு இவற்றை சரிப்பாதி எடுத்து ஒரு களிபோல் கிளறி அதை நெற்றியில் பற்று போடலாம்.

டீ அல்லது கோப்பியில் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து குடித்து வந்தால் தலைவலி குணமாகும்.

Related posts

மூளைதான் நம் மொத்த உடம்பையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்து இயக்கும்.

Fourudeen Ibransa
2 years ago

காது வலிக்கு எண்ணெய் ஊற்றினால் என்ன நடக்கும் தெரியுமா…?

Fourudeen Ibransa
1 year ago

இருமலை மின்னல் வேகத்தில் விரட்டும் மிளகு ரசம்..!

Fourudeen Ibransa
1 year ago