அரசியலமைப்பிற்கான 22 ஆவது திருத்தச்சட்டமூலத்தில் ‘இரட்டை குடியுரிமை’ தடை நீக்கப்படுமானால் அதற்கு ஆதரவு வழங்கப்படமாட்டாது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

சில நிபந்தனைகளின் அடிப்படையில் 22 ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு ஆதரவு வழங்க நாம் தீர்மானித்துள்ளோம்.

ஆனால் குழுநிலை விவாதத்தின்போது இரட்டை குடியுரிமை உடையவர்கள் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கும் யோசனை திருத்தப்படக்கூடாது. அந்த சட்டமூலத்தில் உள்ளவாறு இருக்க வேண்டும்.

இரண்டரை வருடங்களுக்கு பிறகு நாடாளுமன்றத்தை ஜனாதிபதி கலைக்க முடியும் என்ற ஏற்பாடும் தொடர வேண்டும். இவற்றை மாற்றினால் ஆதரவு வழங்கப்படமாட்டாது.” எனவும் சஜித் குறிப்பிட்டார்.