ஐக்கிய மக்கள் சக்தி பக்கம் உள்ள இரு  நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசுடன் இணைவதற்கு தயாராக இருப்பதாக அறியமுடிகின்றது. இதற்கான இரகசிய பேச்சுகள் ஏற்கனவே ஆரம்பமாகியுள்ள நிலையில், இருவரும் ஜனாதிபதியை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளதாகவும் தெரியவருகின்றது. 

2023 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் அடுத்த மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, டிசம்பரில் வாக்கெடுப்புக்கு விடப்படவுள்ளது. அவ்வேளையிலேயே இவர்கள் அரசு பக்கம் தாவக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.