காலி ஹினிதும ஹினிடும்பத்துவ கூட்டுறவு சபைக்கான தேர்தலில் சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி பெரு வெற்றியீட்டுள்ளது. இருபது வருடங்களுக்கும் மேலாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆட்சியில் இந்த கூட்டுறவு சபை இருந்தது. அதன் 99 உறுப்பினர்களில் 52 பேர் ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

முன்னாள் அமைச்சர் பியசேன கமகே ஹினிதும தொகுதியின் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான அமைப்பாளராக உள்ளார். இதுவரை நாடு பூராகவும் நடைபெற்ற கூட்டுறவு சபைத் தேர்தல்களில் ஐக்கிய மக்கள் சக்தி மாபெரும் வெற்றி பெற்றுள்ளதுடன், மொட்டுவின் கோட்டையாக கருதப்பட்ட கூட்டுறவு சபைத் தேர்தல்களில் கூட ஐக்கிய மக்கள் சக்தி அதிக வெற்றியைப் பெற்றுள்ளது.இதேவேளை இந்த வெற்றியானது எதிர்வரும் பொதுத் தேர்தலை நிர்ணயிக்கும் வெற்றியாகவும் கருதப்படுகிறது.