அமெரிக்க டாலருக்கு எதிரான பிரித்தானியாவின் பவுண்டு நாணய மதிப்பு புதன்கிழமையான இன்று மூன்று வாரங்களில் அதிகபட்சமான உயர்வை அடைந்துள்ளது. பிரித்தானியாவின் முன்னாள் பிரதமரான லிஸ் டிரஸின் பொருளாதார கொள்கைகளால் மோசமான வீழ்ச்சி நோக்கி நாட்டின் பொருளாதாரம் பயணிக்க தொடங்கியது.

இதையடுத்து லிஸ் டிரஸ் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து, நாட்டின் புதிய பிரதமராக ரிஷி சுனக் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில் பிரித்தானியாவின் புதிய பிரதமராக ரிஷி சுனக் தேர்ந்தெடுக்கப்பட்டதை தொடர்ந்து, அமெரிக்க டாலருக்கு எதிரான பிரித்தானியாவின் பவுண்டு மதிப்பு $1.16க்கு மேல் அதிகரித்துள்ளது.

இது மூன்று வாரங்களில் அதிகபட்சமான உயர்வு என்றும் பிரித்தானியாவின் தற்போதைய அரசியல் சூழ்நிலை வேகத்தை வலுப்படுத்துவதாகவும் தெரியவந்துள்ளது.

இதற்கிடையில் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் நம்பிக்கையை வைப்பதே இலக்கு என புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ள அரசாங்கத்தின் பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதன்கிழமை காலை 10:59 CETயில் டாலருக்கு எதிராக பவுண்ட் 1.18% உயர்ந்து 1.16052க்கு விற்கப்பட்டது.