இரட்டைக் குடியுரிமை கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் அரச புலனாய்வுப் பிரிவினரால் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக புலனாய்வு பிரிவு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த விசாரணைக்குப் பின்னர், அரசாங்கத்திடம் முதற்கட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றும் இரட்டைக் குடியுரிமையுடன் சுமார் பத்து எம்.பி.க்கள் இருப்பதை உறுதி செய்வதற்காக இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.