தளம்
உலகம்

அவுஸ்திரேலிய குடியுரிமைக்கு தகுதி பெற்ற இலங்கை தமிழ் சிறுமி…!

அவுஸ்திரேலியாவில் பிறந்த இலங்கை தமிழ் சிறுமிக்கு இப்போது 10 வயதான நிலையில் அவர் அந்நாட்டின் குடியுரிமை பெரும் தகுதியை அடைந்துள்ளார். அவரது குடியுரிமைக்காக விண்ணப்பித்திருந்த நிலையில், அரசாங்கத்திடமிருந்து அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளதாக பதில்கடிதம் கிடைத்துள்ளது. இதனால், மொத்த குடும்பமும் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். மேலும், இது அங்கீகரிக்கப்படாத குடும்பத்திற்கு நம்பிக்கையை அளித்துள்ளது.

அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் உள்ள Ballarat நகரத்தில் வசிக்கும் நீலவண்ணன் பரமானந்தன் மற்றும் அவரது குடும்பத்தினர் தங்கள் மகள் நிவேவின் 10-வது பிறந்தநாளை அக்டோபர் 24-ஆம் திகதி அன்று, நண்பர்களை அழைத்து கேக் வெட்டி கொண்டாடினர்.

ஏனெனில் அவர்களுக்கு இது தங்கள் குழந்தையின் சாதாரண பிறந்தநாள் அல்ல, இந்த குடும்பத்திற்கும் அவர்களை அறிந்தவர்களுக்கு இது ஒரு சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது.

அப்பா (நீலவண்ணன்), அம்மா, மூன்று பெண் குழந்தைகள் கொண்ட இந்த குடும்பத்தில், அவுஸ்திரேலிய குடியுரிமை பெற்ற ஒரே உறுப்பினர் என்றால், அது அவர்களது கடைசி மகள் நிவே மட்டும் தான்.

நீலவண்ணன் தனது சமூக வலைதள பக்கத்தில் தனது குடும்பத்தின் புகைப்படத்தையும், மகள் குடியுரிமைக்கு தகுதி பெற்றிருக்கு மகிழ்ச்சியையும் பகிர்ந்துள்ளார்.

Related posts

பாகிஸ்தான் மீண்டும் ஏவுகணை சோதனை..!

Fourudeen Ibransa
3 years ago

தாய்லாந்தில் கனமழையால் 70 ஆயிரம் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின!.!

Fourudeen Ibransa
3 years ago

இஸ்ரேல் என்ற ஒரு தேசமே இல்லாத போது அதில் எப்படி ஜெரூசலம் தலைநகரானது – வடகொரிய அதிபர் கிம் அமெரிக்காவுக்கு செருப்படி..

Fourudeen Ibransa
3 years ago