ஹாலோவீன் திருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த அந்நாட்டு அதிபர் யுன் சுக் (Yoon Suk-yeol) இயோல் நாடு முழுவதும் தேசிய துக்கம் கடைப்பிடிக்கப்படும் என அறிவித்துள்ளார். தென்கொரியாவின் இடோவான் மாவட்டத்தில் ஹாலோவீன் எனப்படும் பேய் திருவிழா ஆண்டுதோறும் ஓக்டோபர் மாத இறுதியில் நடைபெறும். இந்த ஆண்டு திருவிழா நடந்த நிலையில் பேய் வேடமணிந்த மக்கள் இதில் பங்கேற்றனர்.

ஒரு குறுகிய தெருவில் மக்கள் கூட்டம் அதிகரித்ததால் மூச்சுத் திணறி பலர் உயிரிழந்தனர். இதுவரை பலி எண்ணிக்கை 150-ஐ கடந்துள்ளது. இச்சம்பவத்தில் இலங்கையர் ஒருவரும் உயிரிழந்துள்ளார்.

இதில் 19 வெளிநாட்டவர்களும் அடங்குவர். மேலும், 80-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தததாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் உலகையே உலுக்கி உள்ளது.

கொரோனா பாதிப்பால் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஹாலோவீன் திருவிழா நடைபெறாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஹாலோவீன் நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், ஹாலோவீன் நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த அந்நாட்டு அதிபர் யுன் சுக் இயோல் நாடு முழுவதும் தேசிய துக்கம் கடைப்பிடிக்கப்படும் என அறிவித்துள்ளார்.