கருங்கடல் பகுதியில், சனிக்கிழமையன்று மட்டும் 16 உக்ரைன் ட்ரோன்கள் தங்கள் கப்பல்களைத் தாக்கியதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. அப்படி தங்களைத் தாக்கும் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாக தெரிவித்துள்ள ரஷ்யா, கனடா மீது குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளது.

அதாவது, சுட்டு வீழ்த்தப்பட்ட ட்ரோன்களை ஆராயும்போது. அவற்றில் உள்ள வழிகாட்டும் கருவிகள் முதலான சில கருவிகளில் கனேடிய தயாரிப்பான சில பாகங்கள் உள்ளதைக் கண்டறிந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.