துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதித்து சிகிச்சைபெற்று வந்த சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவமானது யக்கலமுல்ல – குருந்துவாடி, களுவாகலை பகுதியில் கடந்த ஞாயிறு (30) அன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியைசேர்ந்த 4 வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த 19ஆம் திகதி யக்கலமுல்ல குருந்துவாடி களுவாகலை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் நான்கு வயது குழந்தையும் மற்றுமொருவரும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதேவேளை, துப்பாக்கிச் சூட்டில் நான்கு வயது சிறுவன் வயிற்றில் படுகாயமடைந்து கலி கராபிட்டிய போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் ரி 56 ரக துப்பாக்கியால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதுடன், கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்ய யகலமுல்ல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.