நீர் கட்டணத்தை செலுத்துவதில் தாமதம் செய்யும் அரச நிறுவனங்களுக்கு எதிர்காலத்தில் தாமதக் கட்டணத்தை அறவிட நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தீர்மானித்துள்ளது.

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் கட்டணம் வசூலிக்க முடிவு செய்துள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னர் அரச நிறுவனங்களுக்கு தாமதக் கட்டணம் அறவிடப்படவில்லை எனவும், அரச நிறுவனங்களால் கட்டணங்களை செலுத்துவதற்கு முன்னுரிமை வழங்காமையினால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.

நீர் கட்டணத்தை பெற்ற 90 நாட்களுக்குள் செலுத்த வேண்டும், இல்லையெனில் அந்த அரசு நிறுவனங்களிடம் இருந்து தாமத கட்டணம் வசூலிக்கப்படும்.

இது தொடர்பான சுற்று நிருபத்தை எதிர்காலத்தில் வெளியிடவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளது.