வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் ‘வாரிசு’ திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். வாரிசு இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தீபாவளி தினத்தன்று ‘வாரிசு’ திரைப்படத்தின் போஸ்டரை வெளியிட்டு, சங்கராந்திக்கு திரைப்படம் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. இதையடுத்து ‘வாரிசு’ படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது.

முதல் சிங்கிள் அறிவிப்பு இதைத்தொடர்ந்து ‘வாரிசு’ படத்தின் முதல் சிங்கிள் புரோமோ இன்று மாலை 6.30 மணிக்கும் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி இப்படத்தின் ‘ரஞ்சிதமே’ பாடலின் புரோமோ வெளியாகியுள்ளது. மேலும், அந்த வீடியோவில் இந்த பாடல் வருகிற நவம்பர் 5-ஆம் தேதி வெளியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை விஜய் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.