பசுமாடு ஒன்று கன்று ஈன்றாமலே 24 மணிநேரம் பால் கறக்கும் அதிசயம் தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்துள்ளது. தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள நந்தவனப்பட்டியை சேர்ந்த பெருமாள்(50) மற்றும் மயில்(460 தம்பதிகள். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருந்து வருகின்றனர். விவசாயம் பார்த்து வரும் பெருமாள் கால்நடைகளையும் வளர்த்து வரும் நிலையில், சமீபத்தில் கன்றுக்குட்டி ஒன்றினை வாங்கி வளர்த்து வந்துள்ளார்.

குறித்த கன்று சற்று வளர்ந்தவுடன் பால் கறக்க துவங்கியுள்ளது. கன்று ஈன்றாமலும், சினை ஊசி எதுவும் போடாமல் பால் கறப்பது ஆச்சரியமாக இருந்த நிலையில், சில தருணங்களில் 24 மணிநேரமும் குறித்த மாடு பால் கறக்கின்றதாம்.

இந்த தகவல் அந்த பகுதி முழுவதும் பரவிய நிலையில், குறித்த மாட்டினை தெய்வீக மாடு என்று கூறி மக்கள் அவதானித்து செல்வதுடன், அவர்களுக்கு நல்லது நடப்பதாகவும் கூறுகின்றனர்.

குறித்த கன்று வீட்டிற்கு வருவதற்கு முன்பு மிகவும் கஷ்டமான சூழ்நிலை இருந்ததாகவும், வந்த பின்பு நல்லது நடைபெறுவதுடன் தனது கஷ்டம் தீர்ந்துவிட்டதாக மாட்டின் உரிமையாளர் கூறுகின்றார்.

அதுமட்டுமில்லாமல் வீட்டில் தாங்கமுடியாத கஷ்ட சூழ்நிலையில், மாட்டிற்கு கீரைக்கட்டு, புல் மற்றும் எதாவது தீவனங்கள் கொடுத்து அதன் காலில் விழுந்து வழிபட்டால் தங்களது கஷ்டங்கள் குறைவதாகவும் உரிமையாளர் கூறுகின்றார்.