இன்றைய தினம் (07) வலி. தென்மேற்கு பிரதேச சபையின் ஏற்பாட்டில், “முழுநிலா கலைவிழா” நிகழ்வு, வலி. தென்மேற்கு பிரதேச சபையின் கலாச்சார குழுத்தலைவர் க.ஜெசிந்தன் அவர்களது தலைமையில், வலி. தென்மேற்கு பிரதேச சபையின் பொதுநோக்கு மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமான இந் நிகழ்வில் மாணவர்களது கலை நிகழ்வுகளும், விருந்தினர்களது உரைகளும் இடம்பெற்றன. கலைஞர்களின் கலைத்திறமைகளை வெளிக்கொணரும் முகமாக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன் அவர்களும், சிறப்பு விருந்தினராக வடமாகாண எல்.ஓ.எல்.சீ.லைஃப் அசூரன்ஸ் நிறுவனத்தின் வலய முகாமையாளர் திரு.ஏ.அன்ரன் ஜனோசன் அவர்களும் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் வலி. தென்மேற்கு பிரதேசசபையின் தவிசாளர், வலி. தென்மேற்கு பிரதேசசபையின் உறுப்பினர்கள், கலைஞர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.