தளம்
உலகம்

ஐரோப்பிய நாடுகளில் கடும் வெப்பம் காரணமாக 15,000 பேர் உயிரிழப்பு..!

ஐரோப்பிய நாடுகளில் கடும் வெப்பம் காரணமாக 2022ஆம் ஆண்டில் இதுவரை 15,000 பேர் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இவர்கள் ஜூன் முதல் ஆகஸ்ட் வரை இறந்துள்ளனர். அந்தவகையில் ஐரோப்பிய நாடுகள் அனுபவித்த மிக மோசமான வறட்சியான காலநிலை இந்த ஆண்டு பதிவாகியுள்ளதாக சர்வதேச வானிலை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை கடும் வெப்பம் காரணமாக 4,500 ஸ்பானியர்களும், 4,000 ஜேர்மனியர்களும் உயிரிழந்துள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன் , ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலான 3 மாதங்களில் 3,200 ஆங்கிலேயர்களும் 1,000 போர்த்துகீசியர்களும் இறந்ததாகக் கூறப்படுகிறது. வெப்பமான காலநிலை உடலுக்கு மிகவும் மோசமானது.

இதய நிலைகளை அதிகப்படுத்துகிறது. இந்நிலையில் நீரிழிவு நோயாளிகள் மற்றும் சுவாசக் கோளாறு உள்ள நோயாளிகள் கடுமையான வெப்பத்தைத் தாங்குவது கடினம் என்று ஐரோப்பிய மருத்துவர்கள் காட்டியுள்ளனர்.

ஐரோப்பிய நாடுகளில் இவ்வாறான அதீத வெப்பமான காலநிலை உருவாகக் காரணம் புவி வெப்பமடைதல் மற்றும் மனித செயற்பாடுகளினால் ஏற்படும் காலநிலை மாற்றமே என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். தற்போது, ​​’COP 27′ காலநிலை மாற்றம் தணிப்பு மாநாடு எகிப்தில் செங்கடலுக்கு அருகில் அமைந்துள்ள ஷாம் எல் ஷேக்கின் ரிசார்ட்டில் தொடங்கியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

2 ஆண்டுகளாக பூனையின் சடலத்துடன் தூங்கும் பிரித்தானிய இளம்பெண்…!

Fourudeen Ibransa
1 year ago

கிழக்கு உக்ரைன், பகுதியில் தொடர்ச்சியான ஷெல் தாக்குதல்.!

Fourudeen Ibransa
2 years ago

“அமெரிக்கா எரியும் நெருப்பில் எண்ணையை ஊற்றுகின்றது” 

Fourudeen Ibransa
2 years ago