சினிமாவில் ஒரு முன்னணி இடத்திற்கு வரும் நடிகர்கள் பலருக்கும் திடீரென அரசியல் ஆசை துளிர்விட்டு விடும். அப்படி சினிமாவில் இருந்து வந்து அரசியலில் களம் கண்ட எத்தனையோ நடிகர்கள் இருக்கிறார்கள். ஆனால் சிலருக்கு வரும் அரசியல் ஆசை சினிமாவில் அவர்கள் பெயரை டேமேஜ் செய்து விடும். அப்படி அரசியலில் இறங்கி சினிமாவில் பெயரை எடுத்துக் கொண்ட ஐந்து நடிகர்கள் பற்றி இங்கு காண்போம்.

சரத்குமார் பல வெற்றி திரைப்படங்களில் நடித்திருக்கும் இவருக்கு சில வருடங்களுக்கு முன்பு பட வாய்ப்புகள் எதுவும் அமையாமல் இருந்தது. தொடர்ச்சியாக நான்கு வருடங்கள் எந்த வாய்ப்பும் இல்லாமல் இவர் இருந்தார். அதன் பிறகு அரசியலில் கவனம் செலுத்தி வந்த இவர் தென்காசி தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவாக ஜெயித்தார். ஆனால் அதன் பிறகு தொகுதி பக்கமே போகாததால் இவருடைய பெயர் அரசியலில் மட்டுமல்ல சினிமாவிலும் கெட்டுப் போனது.

விஷால் தமிழில் முன்னணி நடிகராக நடித்துக் கொண்டிருக்கும் இவருக்கு அரசியலில் மாஸ் காட்ட வேண்டும் என்ற தீராத ஆசை இருக்கிறது. அதனாலேயே இவர் பல முயற்சிகள் மேற்கொண்டார். மேலும் தன் நற்பணி மன்றத்தின் மூலம் மக்களுக்கு இது செய்வேன் அது செய்வேன் என்று வாக்குறுதிகளையும் அள்ளி வீசினார். ஆனால் அது வெறும் வாய்ச்சவடால் தான். இதனால் இவருடைய பெயர் எப்போதுமே டேமேஜ் ஆகி கொண்டிருக்கிறது.

ராதாரவி மூத்த நடிகராக இருக்கும் இவர் அரசியலிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார். தன்னுடைய கட்சிக்கு ஆதரவாக எதிர்க்கட்சியில் இருப்பவர்களை பற்றி எப்போதும் அருவருப்பாக இவர் பேசுவார். அதனாலேயே இவருக்கு நிறைய கெட்ட பெயர் இருக்கிறது. மேலும் சினிமா பட விழாக்களில் கூட இவர் சக கலைஞர்களை இதுபோன்று அவமரியாதையாக பேசுவார்.

கமல் சினிமாவில் ஜாம்பவானாக இருக்கும் இவருக்கு திடீரென அரசியல் ஆசை துளிர்விட்டது. அதனால் ஒரு கட்சியை ஆரம்பித்து அப்போதைய அரசியல் வட்டாரத்தையே கிடுகிடுக்க செய்தார். ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு இவருக்கு அரசியலில் வெற்றி கிடைக்கவில்லை. இதை நம்பி சினிமாவிலும் சிறிது காலம் கவனம் செலுத்தாமல் இருந்தார். அதனால் இவருடைய பெயரும் கெட்டுப் போனது. தற்போது இவர் அரசியலை ஓரங்கட்டி விட்டு சினிமாவில் முழுமூச்சாக இறங்கி இருக்கிறார்.

ராமராஜன் 80 காலகட்ட தமிழ் சினிமாவில் முன்னணியில் இருந்த இவர் தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு திரைப்படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இடையில் சினிமாவை தவிர்த்து விட்டு அரசியலில் இறங்கிய இவ்வாறு ஜெயலலிதாவின் தீவிர ரசிகர். அதனாலேயே இவர் பல மேடைகளில் திமுகவுக்கு எதிராக பிரச்சாரம் செய்தது குறிப்பிடத்தக்கது.