பொத்துவில் அக்/அல்-கலாம் மகா வித்தியாலயம் கடந்த நவம்பர் 6ம் மற்றும் 7ம் திகதிகளில் இரண்டு நாட்கள் கொண்ட கல்விச்சுற்றுலா ஒன்றினை மேற்கொண்டது.

இதில்; தீகவாபி விகாரை,மகாஓய சுடு நீர் ஊற்று கிணறுகள், சொறபொற வாவி அணைக்கட்டு,பேராதனை தாவரவியல் பூங்கா,நுவரெலியா தேயிலைத்தோட்டம் மற்றும் ஸ்ரோபெரி தோட்டம் அதனோடு அம்பேவெல பாற் பண்ணை இன்னும் பல முக்கிய இடங்களையும் பார்வையிட்டதுடன், மாணவர்களும் ,அதிபர் மற்றும் ஆசிரிய குழுவும் மனம் நிறைந்த கற்றல் கள நினைவுச் செய்திகளோடு மீண்டும் கலாம் கலைகூடம் நோக்கி திரும்பினர்.