தளம்
பிரதான செய்திகள்

எந்தத் தேர்தலை எதிர்கொள்ளவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயார்…!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் எந்த முரண்பாடுகளோ, பிளவுகளோ இல்லை. சகலரும் ஓரணியாகச் செயற்படுவதாக கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், பொதுவெளியில் முரண்பாடான கருத்துக்களை வெளியிடுவது தொடர்பாக, ஊடகம் ஒன்று வினவிய போதே சம்பந்தன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனநாயகக் கட்சி. கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்துக்களைச் சுதந்திரமாக வெளியிட முழு உரிமை உண்டு. ஒரு சிலரின் கருத்துக்களை வைத்துக் கொண்டு கூட்டமைப்பு எம்பிக்களுக் கிடையி ல் முரண்பாடு, பிளவு என்று எடை போடக் கூடாது. உறுப்பினர்களுக் கிடையில் எந்த முரண்பாடும், பிளவும் இல்லை.

இதேவேளை உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் சம்பந்தன் கருத்து வெளியிடும் போது, உள்ளூராட்சி சபைத் தேர்தலைப் பிற்போடாது உரிய காலத்தில் அதை அரசாங்கம் நடத்த வேண்டும்.

அதேவேளை, மாகாணசபைத் தேர்தலையும் அரசாங்கம் விரைந்து நடத்த வேண்டும். எந்தத் தேர்தலையும் எதிர்கொள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராகவே உள்ளதென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

எந்த அரசியல்வாதியும் இந்தியாவுக்கு தப்பிச் செல்லவில்லை; 

Fourudeen Ibransa
2 years ago

அமைச்சர்களின் மூளைகள் பழுதடைந்து விட்டதா?

Fourudeen Ibransa
3 years ago

விதைப்பை தானத்துக்கு 70 இலட்சம் ரூபா பேரம் பேசிய ‘பாய்’…!

Fourudeen Ibransa
1 year ago