வட்டு மத்திய கல்லூரியின் நிறுவுனர் நினைவு நாளும், பரிசளிப்பு விழாவும் இன்றையதினம் கல்லூரியின் அதிபர் தலைமையில், கல்லூரியின் பொது மண்டபத்தில் நடைபெற்றது. மேற்கத்தேய இசை வாத்தியங்கள் முழங்க விருந்தினர்கள் அழைத்து வரப்பட்டு மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வு ஆரம்பமானது. அதனைத்தொடர்ந்து வரவேற்பு நடனம் இடம்பெற்றது.

கலைநிகழ்ச்சிகள், அதிபர் மற்றும் விருந்தினர்களின் உரைகளினைத் தொடர்ந்து பரிசளிப்பு நிகழ்வு இடம்பெற்றது. வலிகாமம் கல்வி வலயத்தின் பணிப்பாளர் ரவிச்சந்திரன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட இந்நிகழ்வில், கல்லூரியின் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள் மற்றும் பெற்றோர் என பலரும் கலந்துகொண்டனர்.