தளம்
பிரதான செய்திகள்

கந்தகாடு முகாமில் இருந்து தப்பிச் சென்றவர் பட்டினியால் சாவு…!

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து தப்பியோடிய நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கடந்த 10ஆம் திகதி வெலிகந்த கந்த காட்டில் காணாமல் போயிருந்த நிலையில் பொலிஸாரும் இராணுவத்தினரும் இவரை மீட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பல நாட்களாக உணவருந்தாமல் இருந்த அவர், பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் நேற்று இரவு உயிரிழந்துள்ளார்.

கடுவெல நீதவான் நீதிமன்றத்தினால் புனர்வாழ்விற்காக கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட 31 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

கடந்த 7ஆம் திகதி கந்தகாடு புனர்வாழ்வு முகாமில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலினால் ஏற்பட்ட குழப்பத்தின் போது கைதிகள் குழுவொன்று தப்பிச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

சுதுமலையில் பணம் கொள்ளை…!

Fourudeen Ibransa
1 year ago

மறு அறிவித்தல் வரை மீன்பிடியில் ஈடுபட வேண்டாம்!- அவசர அறிவித்தல்….!

Fourudeen Ibransa
1 year ago

பணவீக்கம் குறைகிறது..!

Fourudeen Ibransa
2 years ago