எகிப்தில் நடக்கும் காலநிலை மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உரையாற்றும்போது காலநிலை ஆர்வலர்கள் இடைமறித்தது சலசலப்பை ஏற்படுத்தியது. ஐக்கிய நாடுகளின் காலநிலை உச்சி மாநாடு எகிப்தில் நடந்து வருகிறது. வெள்ளிக்கிழமை அன்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உரையாற்றினார்.

அவர், மோசமான காலநிலை நெருக்கடியை சமாளிக்க நடவடிக்கை எடுப்பதில் அமெரிக்கா உலகத்தலைவராக செயல்படுவதாக கூறினார். அப்போது பார்வையாளர்கள் பகுதியில் இருந்து எழுந்த சிலர், கையில் பதாகைகளை ஏந்தி எதிர்ப்பு கோஷங்களை எழுப்பினர்.

அவர்கள் ஏந்தியிருந்த பதாகையில் மக்களுக்கு எதிராக எரிபொருள்கள் என எழுதப்பட்டிருந்தது. எதிர்ப்பு கோஷத்தால் அங்கு சற்று சலசலப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து பாதுகாப்பு அதிகாரிகள் கோஷமிட்ட ஆர்வலர்களை அங்கிருந்து வெளியேற்றினர்.