மேற்கு வங்க மாநிலம் பர்கானாஸ் மாவட்டம் பங்கான் பகுதியைச் சேர்ந்தவர் ஷியாமல் முண்டா. இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நடந்த விபத்து காரணமாக கடும் மன உளைச்சலில் இருந்துவந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், ஷியாமல் நேற்று (நவ. 23) வீட்டின் கழிவறைக்கு சென்றுவிட்டு தனது அறைக்கு சென்றார்.
அதன்பின் அவரது சகோதரர் நிர்மல் முண்டா கழிவறைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு ரத்தக்கறை படிந்திருந்தை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து உடனே தாயிடம் தெரிவித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த தாய், ஷியாமல் முண்டாவின் அறைக்கு சென்று பார்த்தபோது, அந்த அறை முழுவதும் ரத்தம் சிந்தியிருந்தது.
அதைத்தொடர்ந்து அவரை இருவரும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தனர். அப்போதுதான் அவர் தனது ஆண் உறுப்பை துண்டித்துக்கொண்டது தெரியவந்தது. அவரது உடல்நிலை மோசமானதால் மருத்துவர்கள் கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
அதன்படி அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இருப்பினும் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். முதல்கட்ட தகவலில் காய்கறி வெட்டும் கத்தியால் ஆணுறுப்பை துண்டித்திருப்பது தெரியவந்துள்ளது.

Related posts
இணைய தொழில்நுட்ப உதவி

இணைந்திருங்கள்