உலகக்கோப்பை கால்பந்து தொடர்பில் பரவும் குறுந்தகவல் போலியானது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கத்தாரில் உலகக்கோப்பை கால்பந்து போட்டி தொடர் நடந்து வருகிறது. இதுதொடர்பாக குறுந்தகவல் ஒன்று தமிழகத்தில் பரவி வருகிறது.

அதில், FIFA உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு 2022 கார்டெல் உலகக்கோப்பையைப் பார்க்க 50 ஜிபி டேட்டாவை இலவசமாக வழங்குகிறது. நான் என்னுடையதைப் பெற்றேன் எனவும் இதைத் திறக்கவும் என லிங்க் ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் உலகக்கோப்பை தொடர்பிலான இந்த குறுந்தகவல் போலியானது என்றும், அந்த லிங்க்-ஐ click செய்தால் செல்போன் ஹேக் செய்யப்பட வாய்ப்பு உள்ளது என்றும் சைபர் கிரைம் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.