தளம்
பிரதான செய்திகள்

60 ரூபாவுக்கு முட்டை விற்பனை செய்த வர்த்தகருக்கு ஒரு இலட்சம் ரூபாய் அபராதம்..!!

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்திலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் கட்டுப்பாட்டு விலையை மீறி 60 ரூபாவுக்கு முட்டை விற்பனை செய்த வர்த்தகரை ஒரு இலட்சம் ரூபாயை அபராதமாக செலுத்துமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் பீற்றர்போல், உத்தரவிட்டு தீர்ப்பளித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட நுகர்வேர் அதிகாரசபை உதவி பணிப்பாளர் ஆர்.எப். அன்வர் சதாத் தலைமையிலான குழுவினர் சம்பவதினமான வியாழக்கிழமை (24) திகதி திடீர் சோதனை நடவடிக்கையினை முன்னெடுத்தனர்.

இதன்போது அரசாங்கம் அறிவித்த முட்டையின் விலை 50 ரூபாயாக இருந்தபபோது அதனை மீறி வர்த்தகர் ஒருவர் 60 ரூபாய்க்கு முட்டை விற்பனை செய்து வந்த நிலையில் அவரை பிடித்ததுடன் அவருக்கு எதிராக உடனடியாக அன்றைய தினம் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் பீற்றர்போல் முன்னிலையில் ஆஜர்படுத்தியதையடுத்து அவரை அபராதமாக ஒரு இலட்சம் ரூபாய் செலுத்துமாறு உத்தரவிட்டு தீர்ப்பளித்தார்.

Related posts

போராட்டம் நடத்துவோர் தேசத்துரோகிகள் – ஐ.தே.க. சீற்றம்

Fourudeen Ibransa
1 year ago

கிறிஸ்தவ தேவாலயத்திற்குள் உட்செல்ல முற்பட்ட முஸ்லிம் இளைஞர் கைது.!

Fourudeen Ibransa
3 years ago

900 சுற்றுலா பயணிகளுடன் கொழும்பு வந்தடைந்த சுற்றுலா கப்பல்..!

Fourudeen Ibransa
1 year ago