பல சவால்களை முறியடித்து 𝙳𝚛. சாபி ஷஹாப்தீனின் மகள் ஜைனப்‌ 9 பாடங்களில் ஏ சித்தி

பெண்களுக்கான சானிட்டரி 𝚙𝚊𝚍𝚜, நாப்கின்களை, தனது சக பாடசாலை மாணவிகளுக்கு இலவசமாக விநியோகித்த சாபியின் சஹாப்தீனின் மகளின் கல்வி தொடர்பான ஒரு பதிவு .

இந்த வருடம் 𝙶𝙲𝙴 𝙾/𝙻 பொதுப் எழுதிய குழந்தைகளில் அதிக ஊடக கவனத்தைப் பெற்ற குழந்தை ‘வைத்தியர்‌ சாபி சஹாப்தீன் அவர்களின் மகள் பாத்திமா ஜைனப்‌ சாபி சஹாப்தீன்‌ஆவார்.

மரியதேவ பாடசாலையில் சிறுமிகளுக்கு ‘இலவசமாக சானிட்டரி 𝚙𝚊𝚍𝚜 நாப்கின்களை விநியோகித்ததாக’ கூறி பள்ளியிலிருந்து நீக்கப்பட்ட டாக்டர் சாபியின் அன்பு மகள் அந்தப் பாடசாலையில் புத்த தர்மத்தை ஒரு பாடமாக படித்து வநதாலும், பொதுத் தேர்வுக்கு அதை தெரிவு செய்து படிப்பை பின் தொடர முடியவில்லை

இஸ்லாம் பாடத்தை குறுகிய காலத்தில் படித்து , அனைத்துப் பாடங்களிலும் ‘,”𝙰” சித்திகளை பெற்றார்.

ஒன்பதாம் ஆண்டு வரை மரியதேவ பாடசாலையில் திறமையாக இருந்த மாணவிக்கு, கொழும்பில் தேசிய பாடசாலை ஒன்று அனுமதி வழங்கப்பட்டது.

கொழும்பில் உள்ள பாடசாலையிலிருந்தும் வெளியேற்றப்பட்டார்

பின்னர் கல்முனை மஹ்மூத் பெண்கள் கல்லூரிக்குச் செல்ல நேர்ந்தது. குருநாகலிலிருந்து கல்முனைக்குச் சென்ற சிறுமி தற்போது கண்டி பதியுதீன் மஹ்மூத் பாடசாலையில் கல்வி கற்று வருகின்றார்.

மரியதேவ வித்தியாலயத்தில் கல்வி கற்கும் போதே சிங்கள மொழி மூலம் பௌத்தத்திற்கு அதிக புள்ளிகளைப் பெற்றுள்ளார்.

கல்முனைக்குச் சென்று இஸ்லாத்தை தமிழில் கற்க வேண்டும். பௌத்தத்திற்கு பதிலாக இஸ்லாம் பாடத்தை தேர்வு எழுதி அதிலும் சிறந்த ‘ஏ” மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

2022ல் ‘ஏ 9’ பெற்ற 10,000க்கும் மேற்பட்ட குழந்தைகளில் சாபியின் மகளின் துணிச்சலை பத்து பேர் கொண்ட கூட்டத்தால் தோற்கடிக்க முடியவில்லை என்பது சிறப்பு. அவரின் துணிச்சலுக்கு வல்லவன் துனைபுரிவானாக.

2022 ல் பாத்திமா ஸைனப் என்ற இந்த சிங்கப் பெண் , தான் புதைக்தப்பட் சேற்று குழியிலிருந்து வெளியே வருகிறாள்.

.ஸைனப் என்ற சிங்கப் பெண் ஏனைய‌ பெண் மாணவிகளுக்கு ஓர் உதாரணம்

அவளைப் பற்றி ஊடகங்களில் மிகவும் கொச்சையான புனைகதைகளை எழுதியவர்கள் இன்னும் நாற்றமடிக்கும் துவேஷ சேற்றில் புதைந்து கொண்டுள்னர்.உள்ளனர்.