பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் சமூக நல்லிணக்கம் ஏற்பட்டால் பட்டம் முடித்து வெளியேறும்போது அவர்கள் சமூகத்தில் நாளை தலைவர்களாக உருவாக்கப்படுவார்கள்! உபவேந்தர் றமீஸ் அபூபக்கர் தெரிவிப்பு.

அந்த வகையில் பல்கலைக்கழக மாணவர்களுடைய மத்தியில் இந்த சமூக நல்லிணக்கம் ஏற்ப்பட்டால், பல்கலைகழகலிருந்து பட்டம் பெற்று வெளியேறும் போது அவர்கள் சமூகத்தில் நாளை தலைவர்களாக இருப்பார்கள் என்றும் தெரிவித்தார்.

யுத்தம் நடைபெற்று புரையோடிய பிராந்தியங்களிலே சமூக நல்லிணக்கத்தை மீள கட்டியலுப்ப வேண்டும் என்ற நோக்கில் அரசாங்கம் பலநிகழ்வுகளை நடாத்தி கொண்டு இருக்கிறது.

அந்த வகையில் தேசிய மீலாதுன் நபி மீதனா அன்பையும், பெருமையும் வலுப்படுத்தும் என்றும், நமது பண்பாட்டுப் பன்முகத்தன்மையால் பற்றிய நுண்ணறிவை நமது உன்னதமானவர்களுக்கு வழங்கவேண்டும் என தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் தெரிவித்தார்.

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக சமூக நல்லிணக்க மையம் ஏற்பாடு செய்த “கலாசார நிகழ்வுகள்” செய்வாய்க்கிழமை (29) பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கைகள், அரபுமொழிபீடத்தில் பல்கலைக்கழக சமூக நல்லிணக்க மையத்தின் பணிப்பாளர் கலாநிதி எம்.எம். பைறோஸ் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இதில் உரையாற்றும் போதே உபவேந்தர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் அவர் உரையாற்றுகையில்,

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மீலாத் கொண்டாட்டத்தின் முக்கியத்துவத்தையும் மற்றும் நபிகள் நாயகம் (ஸல் அவர்களின் வாழ்நாளில் அவர்கள் செய்த சாதனைகளையும் அவர்களின் வாழ்க்கையைப் பற்றியும் உரையாற்றினார்.

இலங்கையிலுள்ள முஸ்லிம் சமூகத்தின் தேவைகள் மற்றும் விருப்பங்களை எடுத்துரைத்துடன் எதிர்காலத்தில் முஸ்லிம் சமூகத்தின் முன்னேற்றத்துக்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளையும் வலியுறுத்தினார்.

பல்கலைக்கழக மாணவ, மாணவிகளினால் அனைத்து சமூகங்களுக்கிடையில் சகவாழ்வு மற்றும் நல்லிணக்கத்தின் பொருத்தத்தை அடையாளம் காணும் கலாச்சார நிகழ்ச்சி நடாத்தப்பட்டது.

இந்நிகழ்வு ஆங்கிலம், தமிழ், மற்றும் சிங்கள கல்வியறிவு தினம் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள், வாசகர், மாதப்போட்டிகளுக்கான பரிசில்களும் வழங்கும் நிகழ்வுடன், கண்கவர் கலாச்சார நிகழ்ச்சிகளுடன் பின்வரும் அதிதிகளின் பிரசன்னத்துடன் கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வில் சமூக நல்லிணக்க மையத்தின் பணிப்பாளர் கலாநிதி எம்.எம். பைறோஸ் அவர்களால் உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கருக்கு நினைவுச் சின்னம் வழங்கிக் கெளரவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கலை, கலாசாரபீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம்.எம்.பாஸில், பிரயோக விஞ்ஞானபீடத்தின் பீடாதிபதி கலாநிதி எம்.எச்.ஹாரூன், இஸ்லாமிய கற்கைகள், அரபுமொழி பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எஸ்.எம்.எம்.மஸாஹிர், பொறியியல் பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம்.ஏ.எல்.அப்துல் ஹலீம், மற்றும் பல்கலைக்கழக நூலகர்எம்.எம்.றிபாய்தீன், கலை, கலாசாரபீட, தமிழ் துறைத்தலைவர் முதன்மை பேராசிரியர் றமீஸ் அப்துல்லாஹ், அரசியல் துறைத்தலைவர் பேராசிரியர் எம்.ஏ.எம்.பௌசர், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், சகல பீடங்களையும் சேர்ந்த மாணவ பிரதிநிதிகள், பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.