தளம்
மருத்துவம்

முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகளை அகற்ற சில வழிமுறைகள்….!

பொதுவாக நம்மில் பலருக்கும் இருக்கும் பிரச்சினைகளில் ஒன்று தான் கரும்புள்ளிகள். இது ஆண், பெண் என இருவருக்குமே முகத்தின் தாடைப் பகுதியிலும், மூக்கின் மேல் பகுதியிலும் உருவாகும். இதனை நீக்குவது என்பது பலருக்கும் கடினமான ஒரு விஷயமே. முகத்தில் அதிகமாக சேரக்கூடிய எண்ணெய் பசையாலும், ஈரப்பதம் குறைவாக இருப்பதனாலும் இதுபோன்று கரும்புள்ளிகள் முகத்தில் ஏற்படுகின்றது.

இதை எளிய முறையில் வீட்டிலேயே நீக்கலாம். தற்போது அவை எப்படி என்பதை இங்கே பார்ப்போம்.

தேவையானவை

டீ ட்ரீ எண்ணெய் – 2-3 துளி

களிமண் – 1 டீஸ்பூன்

தண்ணீர் – தேவைக்கு

கரும்புள்ளிகள் மறைய டிப்ஸ்

செய்முறை

முகத்தை ஆவி காட்டி நன்றாக துளைகள் பெரிதாகும் வரை விடுங்கள்.

களிமண் உடன் டீ ட்ரீ எண்ணெயை கலந்து அனைத்தையும் பவுடராக்கி குழைத்து முகத்தில் சமமாக பரப்பி தடவுங்கள்.

கண்கள் அல்லது வாய்க்கு நெருக்கமாக வைக்க வேண்டாம். பிறகு 15 நிமிடங்கள் வைத்திருந்து வெதுவெதுப்பான நீரில் கழுவி விடுங்கள்.

பலன்

இது முகத்தில் இருக்கும் எண்ணெயை வெளியேற்றி முகப்பருவை வெளியேற்றுகிறது.

சருமத்துளைகளை சுத்தம் செய்கிறது. களிமண் சரும அழுக்குகளை வெளியேற்றுவதால் கரும்புள்ளிகள் காணாமல் போகிறது.

Related posts

கேன்சரை சுத்தமாக்கும் வத்தாளைக்கிழங்கு.1

Fourudeen Ibransa
1 year ago

முகப்பரு தழும்புகளை நீக்க உதவும் வெந்தயம்.!

Fourudeen Ibransa
3 years ago

’ஒரு பெண் கர்ப்பம் தரித்திருக்கிறாள்’ என்று உறுதி செய்வது ஸ்கேன் பரிசோதனை மட்டுமே !

Fourudeen Ibransa
3 years ago