நம் உடல் ஆரோக்கியமாக இருக்க ஆரோக்கியமான நுரையீரல் அவசியம். உடலியக்கத்திற்கு ஆற்றல் தரும் ஆக்சிசனை உள் எடுத்துக்கொள்வதும் கார்பன்டைக்சைடு வளிமத்தை வெளியேற்றுவதும் நுரையீரலின் முக்கிய பணியாகும். ஒரு நாளைக்கு சராசரியாக 22,000 முறை மூச்சு விடும் நாம், கிட்டதட்ட 255 கன மீட்டர் (9000 கன அடி) காற்றை உள்ளிழுத்து வெளியிடுகிறோம். மாசடைந்த சுற்றுச்சூழலால் நாம் சுவாசிக்கும் காற்றின் மூலம் தொற்றுகிருமிகள் நம் உடலுக்குள் நுழைகின்றன.

இதனால் நுரையீரல் மாசடைவதால் சளி, இருமலில் தொடங்கி பல்வேறு சுவாச பிரச்னைகளை உருவாக்குகிறது. எனவே நுரையீரலை ஆரோக்கியமாகவும் பத்திரமாகவும் பாதுகாக்கும் உணவுகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

இயற்கையாகவே பூண்டில் இருக்கும் பைட்டோநியூண்ட்ரியண்ட்டான அல்சின் தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிர்களை அழிக்கிறது. அத்துடன் புற்றுநோய் எதிர்ப்பியாகவும் செயல்படுவதுடன் நுரையீரலை நோய்களில் இருந்தும் பாதுகாப்பதாக சீன ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

கீரைகளில் உள்ள பைட்டோகெமிக்கல் ஆக்சிஜனேற்ற சேதம், நுரையீரல் வீக்கம் மற்றும் புற்றுநோய்க்கு எதிராக செயல்படும் ஆற்றல் கொண்டது, அடிக்கடி உணவில் கீரையை சேர்த்துக் கொள்வது உடலுக்கு பல நன்மைகளையும் அளிக்கிறது.

இஞ்சியில் உள்ள ஜிஞ்சரால் ஆஸ்துமா, சளி, ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வாகிறது, சளி தொல்லை இருக்கும் நாட்களில் இஞ்சியுடன் சேர்த்து தண்ணீரை கொதிக்க வைத்து குடித்தால் பலனை தரும்.

அப்ரிகாட் பழத்தில் உள்ள விட்டமின் சி, விட்டமின் ஈ, பீட்டா கரோட்டின், லைகோபீன் போன்ற சத்துக்கள் நுரையீரல் புற்றுநோயிலிருந்து பாதுகாக்கிறது.

ப்ரோக்கோலியில் இருக்கும் எதிர்ப்பு அழற்சி பண்புகள் நுரையீரலை பாதுகாப்பதுடன் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் அளிக்கிறது.

மஞ்சளில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட் மற்றும் எதிர் அழற்சி பண்புகள் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கிறது, எனவே தினமும் சிறிதளவேனும் மஞ்சளை உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம்.

அவகோடாவின் விட்டமின் கே, ஈ, பி6, ரிபோவின் மற்றும் நியாசின் போன்ற ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன, அவகோடாவை சாப்பிட்டு வந்தால் ஆர்திரிடிஸ், நுரையீரல் கோளாறுகளை பாதுகாப்பதாக சமீபத்திய ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.