தளம்
பிரதான செய்திகள்

மின் கட்டணத்தை அதிகரிக்காவிட்டால் நாடு இருளில் மூழ்கும்….!

மின்சாரக் கட்டணத்தை ஜனவரி மாதம் கட்டாயம் அதிகரிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ள எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, அவ்வாறு அதிகரிக்காவிடின் நாடு இருளில் மூழ்குவதை தவிர்க்க முடியாது. இருண்ட யுகத்துக்கு செல்லவேண்டும் என எச்சரித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்றுஇடம்பெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அடுத்த வருடம் முதல் மீண்டும் மின் கட்டணத்தை உயர்த்துவது அத்தியாவசியமானது என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார்.

நேற்று பிற்பகல் கூடிய அமைச்சரவையில் அமைச்சர் கஞ்சன விஜேசேகர இந்த அறிவித்தலை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் மீண்டும் மின்கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என்ற பிரேரணை தொடர்பில் நேற்று அமைச்சரவையில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டது.

மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்காமல் மின்சார சபையின் நஷ்டத்தைக் குறைக்க மாற்றுத் திட்டத்தை நடைமுறைப்படுத்த அமைச்சர்கள் சிலர் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

எவ்வாறாயினும், மின்சார கட்டணத்தை அதிகரிக்காமல் தற்போதுள்ள பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது என மின்வலு எரிசக்தி அமைச்சர் அங்கு தெரிவித்துள்ளார்.

கட்டணத்தை அதிகரிக்காவிட்டால் நாளாந்தம் சுமார் 06 மணிநேரம் மின்வெட்டு ஏற்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு சில நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும், மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட வேண்டும் எனவும் அமைச்சர் அமைச்சரவையில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும், குறித்த கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் இறுதி இணக்கப்பாடு எட்டப்படாமலேயே கலந்துரையாடல் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

மக்களின் சுதந்திரத்தை அரசாங்கம் பறிக்கின்றது- கரு ஜயசூரிய

Fourudeen Ibransa
3 years ago

17ம் திகதி தொடக்கம் இவற்றுக்கெல்லாம் தடை!

Fourudeen Ibransa
3 years ago

கொரோனாத் தொற்றிலிருந்து நாம் மீண்டெழ தடுப்பூசியே ஓர் அடைக்கலமாக உள்ளது.

Fourudeen Ibransa
3 years ago