உக்ரைனின் டாங்கிகள் மீது தாக்குதல் நடத்த ரஷ்யாவின் தெருக்களில் சுற்றி திரியும் வீடற்ற நாய்களை தற்கொலை குண்டுதாரிகளாக பயன்படுத்த மாஸ்கோ திட்டமிட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தாக்குதலில் கடந்த சில மாதங்களாகவே ரஷ்ய படைகள் கடும் நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில், ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருந்து வந்த கெர்சன் நகரை இழந்தது ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

இந்நிலையில் டிசம்பர் 2ம் திகதி ரஷ்ய நகரமான ஓரியோலில் நடந்த சட்டமன்ற கூட்டத்தில் வினோதமான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பது அம்பலமாகியுள்ளது.

அதில் ஓரியோலில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சியின் துணைத் தலைவர் விக்டர் மகரோவ், நாய்களை சீனாவுக்கு அனுப்புவதற்கு முன்பு பரிந்துரைத்திருந்தார்.

ஆனால் தற்போது ரஷ்யாவின் தெருக்களில் சுற்றி திரியும் வீடற்ற நாய்களை பிடித்து டாங்கிகளை வெடிக்க செய்யும் பயிற்சியை நாம் கற்றுக் கொடுக்க வேண்டும் என முன்மொழிந்துள்ளார்.

இருப்பினும் தற்கொலை குண்டுதாரியாக ரஷ்ய நாய்களை பயிற்றுவிப்பதில் உள்ள பல்வேறு தளவாடச் சிக்கல்களை கருத்தில் கொண்டு மகரோவின் சகாக்கள் அவரது யோசனையில் ஆர்வம் காட்டவில்லை.

இது தொடர்பாக பேசிய உறுப்பினர் ஒருவர் தெரிவித்த கருத்தில், நாய்களுக்குப் பயிற்சி அளிக்கும் வேளையில் நாய்களை உயிருடன் வைத்திருப்பதற்கான நிதிச் செலவுகளை குறிப்பிட்டார்.

இறுதியில் விக்டர் மகரோவ்-வால் முன்மொழியப்பட்ட இந்த திட்டத்தை சட்டசபை நிராகரித்தது.

ரஷ்ய ஜனாதிபதி புடினின் சிறப்பு ராணுவ நடவடிக்கை நாளுக்கு நாள் பின்னடைவை சந்தித்து வரும் நிலையில் இதனை தடுத்து நிறுத்த, 2023 இல் பாதுகாப்பு செலவினங்களை கணிசமாக அதிகரிக்கும் திட்டங்களை ரஷ்ய பாதுகாப்பு மந்திரி செர்ஜி ஷோய்கு அறிவித்துள்ளார்.

அத்துடன் “ஒரு சிறப்பு இராணுவ நடவடிக்கையின் போக்கில் அவற்றின் அடுத்தடுத்த பயன்பாட்டுடன் நவீனமயமாக்கல் மற்றும் நம்பிக்கைக்குரிய அமைப்புகளை உருவாக்குவது அவசியம்” என்று ஷோய்கு தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் இராணுவ செலவினங்கள் கிட்டத்தட்ட 150% அதிகரிக்க திட்டம் இருக்கலாம் என தெரியவந்துள்ளது.