பிரபல பாலிவுட் நடிகை மற்றும் மறைந்த ஸ்ரீதேவி மகளும் ஆகிய ஜான்வி கபூர் சமீபத்தில் நடந்த நேர்காணலில் தென்னிந்திய நடிகர்களை பற்றி கூறியுள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில்,விஜய் சேதுபதி நடித்து 2015 ஆண்டு வெளியான நானும் ரவுடி தான் படத்தை ஜான்வி கபூர் 100 முறை பார்த்துள்ளாராம்.

ஜான்வி கபூர் அளித்த பேட்டியில், நானும் ரவுடி தான் படத்தில் விஜய் சேதுபதி மிகவும் காமெடியாக நடித்திருப்பார், அதிலும் அவர் பேசும் “ஹலோ மிஸ்டர் வைட்” என்ற வசனம் எனக்கு மிகவும் பிடித்தது. “சூப்பர் டீலக்ஸ்” படத்திலும் மிக அருமையாக நடித்திருப்பார்.

யாரோ ஒருவர் விஜய் சேதுபதியின் மொபைல் நம்பரை வைத்திருப்பதை அறிந்து, அதை பெற்று அழைத்தேன். “சார் நான் உங்களின் மிக பெரிய ரசிகை, நீங்கள் எப்போவாவது எதாவது படத்தில் உங்களுடன் நடிக்க வேண்டும் என்று நினைத்தால், அதற்கான ஆடிஷனில் நான் கலந்துக்கொள்வேன். நான் உங்களுடன் நடிக்க விரும்புகிறேன் என்று விஜய் சேதுபதியிடம் கூறினேன்”.

விஜய் சேதுபதி அதற்கு என்ன பதில் சொன்னார் என்ற கேள்வி கேட்க பட்டது, அவர் அதற்கு விஜய் சேதுபதி “ஐயோ, ஐயோ, ஓ.. என்றே சொல்லி கொண்டு இருந்தார். அவர் வெட்கப்பட்டாரா என்று சரியாக தெரியவில்லை. நான் ஆர்வமாக பேசியதால் ஆச்சர்யம் அடைந்திருப்பார் என்று நினைக்கிறேன்.