நடிகர் சித்தார்த்தும் நடிகை அதிதி ராவும் காதலிப்பதாக சில காலமாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதனை உறுதி செய்யும் விதமாக, இருவரும் ஜோடியாக சுற்றுவதடன். ஒன்றாக நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டும் வருகிறார்கள்.

ஒன்றாக திரிந்தாலும், நாங்கள் காதலர்கள் அல்ல என சினிமா நடிக, நடிகையர் கூறுவதுண்டு. சித்தார்த்- அதிதி ராவ் ஜோடி தமது காதலை பகிரங்கமாக இதுவரை சொன்னதில்லை.

இவர்களது காதல் விவகாரம் கடந்த சில மாதங்களாகவே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மும்பையில் உள்ள பல்வேறு உணவகங்களில் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சுமார் நான்கைந்து மாதங்களாக இருவரும் சேர்ந்து வாழ்ந்து வருவதாகவும்  செய்திகள் வருகின்றன.

சமீபத்தில் மும்பையில் உள்ள ஒரு ஹோட்டலில் இருந்து இருவரும் வெளியே வரும் போது, புகைப்படங்களில் சிக்கியுள்ளனர்.

சித்தார்த் மற்றும் அதிதி ராவ் ஹைதாரி இருவரும் ஒன்றாக காணப்பட்டதால், பாலிவுட் ஊடகங்கள் அவர்களை துரத்தியது. இதனால் சித்தார்த் கோபமடைந்து நிருபர்களுடன் தகராற்றில் ஈடுபட்டுள்ளார்.

சித்தார்த் மற்றும் அதிதி ராவ் இருவரும் விவாகரத்து பெற்றவர்கள். அவர்கள் இப்போது ஒன்றாக தங்கள் வாழ்க்கையின் புதிய கட்டத்தைத் தொடங்கவிருப்பதாக தெரிகிறது.