முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நாடாளுமன்றத்திற்குள் அழைத்து வர திட்டமிடப்பட்டுள்ளது.

பொதுஜன பெரமுனவிற்குள் ஒரு குழுவினர் தீவிர முயற்சிகளை மேற்கொண்டுவருவதாக தெரியவருகின்றது.

மக்கள் புரட்சியால் கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி பதவியை துறந்தார். 

வெளிநாட்டுக்கு சென்று அங்கிருந்தே இராஜினாமாக் கடிதத்தை அனுப்பினார். தற்போது நாடு திரும்பியுள்ளார்.

இந்நிலையிலேயே கோட்டாவை பிரதமராக்குவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றன. 

இதற்காக அவரை நாடாளுமன்ற உறுப்பினராக்குவதற்கு மொட்டு கட்சி உறுப்பினர்கள் சிலர் முற்படுகின்றனர். 

இதற்காக தேசியப்பட்டியல் எம்.பியொருவர் பதவியை துறக்க தயார் நிலையில் உள்ளார். எனினும், மொட்டு கட்சிக்குள் இது சம்பந்தமாக இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை என தெரியவருகின்றது.