கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்ட பீடத்துக்கு விஜயம் செய்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக மாணவர்கள் குழுவொன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், ஹூ சத்தம் எழுப்பி எதிர்ப்பு தெரிவித்தனர். கொழும்பு பல்கலைக்கழகத்தின் வைரவிழாவில் கலந்து கொண்ட ஜனாதிபதி, கொழும்பு பல்கலைக்கழகத்தின் தரத்தை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் உதவும் என்று தெரிவித்தார்.