உள்ளாட்சிமன்ற தேர்தலை நடத்துவது தொடர்பான தேர்தல் ஆணைக்குழுவின் நிகழ்ச்சி நிரலுக்கு அரசாங்கம் எவ்வித தடையையும் ஏற்படுத்தாது என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று முற்பகல் பிரதி சபாநாயகர் தலைமையில் கூடியது.

இதன்போது உரியகாலப்பகுதிக்குள் உள்ளாட்சிமன்ற தேர்தலை நடத்தி முடிப்பதற்கு தேர்தல் ஆணைக்குழுவுக்கு தேவையான ஏற்பாடுகளை அரசாங்கம் செய்து கொடுக்குமா என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பினார்.

அத்துடன், குட்டி தேர்தலை அரசாங்கம் நிறுத்தக்கூடும் என்ற ஐயப்பாட்டையும் அவர் வெளிப்படுத்தினார்.

இதற்கு பதிலளிக்கையிலேயே நீதி அமைச்சர் மேற்படி அறிவிப்பை விடுத்தார்.