இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தற்போதைய உப தலைவராக உள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராஜா

பதவியில் இருந்து விலக போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவர் இன்றைய தினம் (சனிக்கிழமை) மட்டக்களப்பில் நடைபெறவுள்ள மத்திய குழு கூட்டத்தின் போது பதவி விலகலை உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் அடுத்த உள்ளூராட்சிமன்ற தேர்தலில் மட்டக்களப்பு உட்பட ஏனைய மாவட்டங்களில் இளைஞர் சமுதாயத்துடன் ஒன்றித்து செயற்பட கூடிய ஒரு இளம் சிரேஷ்ட உப தலைவர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என கட்சி உறுப்பினர்கள் எதிர்பார்ப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆகவே தமிழரசுக் கட்சியின் உப தலைவர் பதவிக்கு மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் நியமிக்க வாய்ப்புக்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.