யார் வெளியேறினாலும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பாகவே பயணிப்போம் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் ஊடகப் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) யாழ்.அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே குருசாமி சுரேந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதேவேளை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு விரைவில் பதிவு செய்யப்பட்ட கட்சியாக உருவாகும் என குருசாமி சுரேந்திரன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.