ஹொரவபொத்தானை பிரதேசத்தில் ரியூசன் வகுப்பில் கலந்து கொண்ட 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் நேற்று (08) மாலை கைது செய்யப்பட்டதாக ஹொரவபொத்தானை பொலிஸார் தெரிவித்தனர்.
கஹட்டகஸ்திகிலிய பிரதேசத்தைச் சேர்ந்த ஆசிரியரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபருக்கு அதே வயதுடைய ஒரு மகளும் இருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேகத்திற்கிடமான ஆசிரியர் நடத்திய ரியூசன் வகுப்பில் துஷ்பிரயோகத்திற்கு ஆளான சிறுமியும் கலந்து கொண்டதாகவும், அங்கு துஷ்பிரயோகம் நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அன்றைய தினம் சிறுமி வீட்டிற்கு வந்து வகுப்பின் போது தான் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக பெற்றோரிடம் கூறியதாகவும் சிறுமியின் பெற்றோர் சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
Related posts
இணைய தொழில்நுட்ப உதவி

இணைந்திருங்கள்