அஜித் நடிப்பில் நாளை வெளியாகவிருக்கும் திரைப்படம் துணிவு. இப்படத்தில் அஜித்துடன் இணைந்து முதல் முறையாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார்.

எச். வினோத் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். எதிர்பார்த்தை விட இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

துணிவு படத்தின் மூலம் முதல் முறையாக அஜித்துடன் கைகோர்த்துள்ள மஞ்சு வாரியருக்கு படத்தில் நல்ல ஸ்கோப் உள்ளதாக ஏற்கனவே விமர்சனம் வெளிவந்துள்ளது.

இதனால், மஞ்சு வாரியரின் நடிப்பை திரையில் காண ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கிறார்கள்.

இந்நிலையில், துணிவு படத்தில் நடிக்க நடிகை மஞ்சு வாரியர் ரூ. 1 கோடி சம்பளமாக வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.