இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய கொரோனா நடைமுறைகள் தொடர்பில் சுற்றுலா அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி அட்டையை வைத்திருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கொரோனா தடுப்பூசி போடாத சுற்றுலாப் பயணிகள் வருகைக்கு 72 மணி நேரத்திற்கு முன்னர் பெறப்பட்ட PCR அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் சுற்றுலாத்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.