யாழ்ப்பாணம், கல்வியங்காடு பகுதியை சேர்ந்த 11 மாதங்களேயான குழந்தையொன்று பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்ட கொடூர சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த குழந்தையின் தாயின் சகோதரரே (குழந்தையின் மாமா) இந்த பாதக செயலில் ஈடுபட்டுள்ளார்.

குழந்தையின் பிறப்புறுப்பு பகுதியில் சிகப்பு அடையாளங்கள் காணப்பட்டமையினால் குறித்த குழந்தையின் தாயாரால் குழந்தை வைத்தியரிடம் அழைத்தது செல்லப்பட்டபோது வைத்தியர்களால் உரிய பரிசோதனை முன்னெடுக்கப்பட்ட போது குறித்த குழந்தை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளதற்கான சான்றுகள் உள்ளன என்று தெரிவித்துள்ளனர்.

பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட குழந்தையின் தாயாரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப கட்ட விசாரணைகளின் போது குறித்த வீட்டிற்கு குழந்தையின் தாயின் சகோதரன் வந்து சென்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த நபர் யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் உள்ள பிரபல தனியார் வைத்தியசாலை ஒன்றில் நோயாளர் காவி வண்டியின் சாரதியாக கடமையாற்றி வருவதாகவும் அவர் ஏற்கனவே பல குற்றச்சாட்டுகளுடன் தொடர்பட்ட நபர் எனவும் தெரிவிக்கப்படுவதாகவும் ஆரம்ப கட்ட
விசாரணைகளில் தெரியவந்துள்ளது