தளம்
உலகம்

இழந்த ஓட்டுநர் உரிமத்தை திரும்பப் பெறுவதற்கான நடைமுறைகள்

சவுதி அரேபியாவில் உள்ள பொது போக்குவரத்துத் துறை (மூரூர்) ஒருவர் தனது தொலைந்து போன அல்லது இழந்த ஓட்டுநர் உரிமத்தை திரும்பப் பெறுவதற்கான வழி முறைகளை அறிவித்துள்ளது.ஓட்டுநர் உரிமம் தொலைந்தால் அது தொடர்பாக போக்குவரத்துத் துறைக்குப் புகாரளிப்பது அவசியம்.

மேலும், அவர் மீது நிலுவையில் இருக்கும் அபராத கட்டணம் மற்றும் விதி மீறல் அபராதங்களை செலுத்த வேண்டும். பின்னர் போக்குவரத்து அலுவலகத்தில் புதிய ஓட்டுநர் உரிமத்திற்க்காக விண்ணப்பிக்கலாம் என சவுதி போக்குவரத்துத் துறை தனது அதிகாரப்பூர்வ ட்வீட்டர் கணக்கின் மூலம் தெரிவித்துள்ளது.

ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிக்க, விதி மீறல் அபராதம் செலுத்துதல், மருத்துவ பரிசோதனை முடிவுகளை சமர்ப்பித்தல் ஆகிய நடவடிக்கைகளுக்கு பின்னரே உங்களது விண்ணப்பித்தை சமர்ப்பிக்க இயலும் என சவுதி போக்குவரத்துத் துறை உறுதிப்படுத்தியது.

மேலும், மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள அங்கீகரிக்கப்பட்ட மையங்களில் ஏதேனும் ஒன்றில் முன்பதிவு செய்யலாம். பரிசோதனையின் முடிவு அங்கிருந்து தானாகவே போக்குவரத்து துறைக்கு அனுப்பப்படும்.

Related posts

பிரதமர் ரிஷி சுனக் குடும்பத்தை மொத்தமாக கேவலப்படுத்திய பிரபல பத்திரிகை…!

Fourudeen Ibransa
2 years ago

உக்ரைன் மீது படையெடுத்தால் ரஷியா பேரழிவை சந்திக்கும்..1

Fourudeen Ibransa
2 years ago

தலீபான்களை குறிவைக்கும் ஐ.எஸ் அமைப்பு

Fourudeen Ibransa
3 years ago