தளம்
உலகம்

ஆஸ்திரேலியாவில் 2 முக்கிய மந்திரிகளின் பதவி பறிப்பு.!

ஆஸ்திரேலிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள பாதுகாப்புத்துறை மந்திரி லிண்டா ரெனால்ட்ஸ், அட்டர்னி ஜெனரல் கிறிஸ்டியன் போர்ட்டர் ஆகியோர் மீதான கற்பழிப்பு குற்றச்சாட்டுகள், அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன. அவர்களுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. பல்லாயிரக்கணக்கான பெண்கள் வீதிக்கு வந்து போராடியதால் அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், குற்றச்சாட்டில் சிக்கிய 2 மந்திரிகளையும் அமைச்சரவையில் இருந்து நீக்கி பிரதமர் ஸ்காட் மாரிசன் உத்தரவிட்டுள்ளார். உள்துறை மந்திரி பீட்டர் தட்டனுக்கு பாதுகாப்புத் துறை கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்து.அமைச்சரவை மறுசீரமைப்பின்போது பெண்களுக்கான தொடர்ச்சியான பதவி உயர்வுகளையும் பிரதமர் அறிவித்தார். ஆஸ்திரேலிய அமைச்சரவையில் இதுவரை இல்லாத அளவுக்கு பெண்களுக்கு அதிக பிரதிநிதித்துவம் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

Related posts

அரசியல் கட்சிகளை கூறுபோடுவது ராஜபக்சக்களுக்கு கைவந்த கலை.

Fourudeen Ibransa
2 years ago

சலுகை வழங்கும் வரவுசெலவுத் திட்டம்…!

Fourudeen Ibransa
1 year ago

அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக களம் காணும் எடப்பாடி.!

Fourudeen Ibransa
3 years ago