கடந்த 2018-ஆம் வருடம் மிஸ் இந்தியா பட்டம் வென்றவர் அனு கீர்த்தி வாஸ். விளம்பரத் துறையில் அதிக வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்த்த அவருக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியதாம்.

‘விளம்பரத் துறையில் பிரபலமாக பல விஷயங்களில் சமரசம் செய்துகொள்ள வேண்டியிருக்கிறது. சினிமா துறையில் அந்த அளவுகு சிக்கல் இல்லை. அதனால்தான் சினிமாவில் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டேன்’ என்று தனது சமுக வலைதளப் பக்கத்தில் கூறியிருக்கும் இவருக்கு விஜய் சேதுபதி ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு அமைந்துவிட்டது.

பிக்பாஸ் சீசன் 3-ன் போட்டியாளர் முகென் ராவ் கதாநாயகனாக அறிமுகமாகும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு முதலில் அமைந்துள்ளது. அந்தப் படத்தை இயக்கும் ‘வெப்பம்’ படத்தின் இயக்குநர் அஞ்சனா அலிகான் தான் இந்த வாய்ப்பை வழங்கியுள்ளார். இதில் ஊதியம் எதுவும் பெறாமல் நடித்து வருகிறாராம் அனு கீர்த்தி வாஸ்.

இந்தப் படத்தின் சில காட்சிகளைப் பார்த்த இயக்குநர் பொன்ராம், தனது இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படத்திற்கு கதாநாயகியாக தேர்ந்தெடுத்துள்ளார். முழுவதும் கிராமத்து கதையான இதில் நவீன நகரத்தில் வளர்ந்த அனு கீர்த்தி கிராமத்துப் பெண்ணாக நடிக்கிறாராம். படத்தை தயாரிப்பது சன் டிவி என்பதால் 15 லட்சம் முதல் சம்பளமாகக் கொடுத்துள்ளனராம்.