தளம்
உலகம்

533 மில்லியனுக்கு மேற்பட்ட பயனாளர்களின் தரவுகளை வெளியிட்ட பேஸ்புக்

533 மில்லியனுக்கு மேற்பட்ட பயனாளர்களின் தனிப்பட்ட தரவுகளை வெளியிட்ட பேஸ்புக் நிறுவனம்
நூறு மில்லியனுக்கும் மேற்பட்ட பேஸ்புக் பயனாளர்களின் தனிப்பட்ட தரவுகள் மற்றும் தொலைப்பேசி எண்கள் என்பன ஆரம்ப கட்ட தகவல்களை வெளியிடும் அமைப்பொன்றினால் இணையத்தில் இலவசமாக வெளியிடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு வெளியிடப்பட்ட தரவுகளில் 106 நாடுகளைச் சேர்ந்த 533 மில்லியனுக்கும் அதிகமான பேஸ்புக் பயனாளர்களின் தனிப்பட்ட தரவுகள் உள்ளடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் அமெரிக்காவைச் சேர்ந்த 32 மில்லியன் பயனாளர்கள், இங்கிலாந்தில் 11 மில்லியன் பயனாளர்கள் மற்றும் இந்தியாவில் 6 மில்லியன் பயனாளர்களின் தரவுகள் உள்ளடங்குகின்றன.

அத்துடன், தொலைபேசி எண்கள், பேஸ்புக் கணக்குகள், சுய விபரங்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் என்பன இவ்வாறு பகிரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது 

Related posts

தெற்கில் அரசியல் பரபரப்பு …! பசில் இராஜினாமா.. !!

Fourudeen Ibransa
2 years ago

ரணில் பிரதமர் பதவிலிருந்து அவுட் !

Fourudeen Ibransa
2 years ago

இனப்பிரச்சினைக்கு இந்த வருட இறுதிக்குள் தீர்வு…!

Fourudeen Ibransa
1 year ago