பாக்தாத்தின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள மருத்துவமனையொன்றில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 27 பேர் உயிரிழந்துள்ளதுடன், 46 பேர் காயமடைந்துள்ளனர் என சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இது கொரோன நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவமனை என்று அதன் அருகிலுள்ள மூன்று மருத்துவமனைகளின் மருத்துவ வட்டாரங்கள் உறுதிபடுத்தியுள்ளன.

ஈராக் தலைநகரான பாக்தாத்தின் தியாலா பிரிட்ஜ் பகுதியில் அமைந்துள்ள இப்னு காதிப் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஆக்ஸிஜன் தொட்டி வெடித்தமையினாலேயே இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

விபத்தினையடுதது பல அம்புயூலன்ஸ்கள் வைத்தியசாலையை நோக்கி விரைந்ததுடன், காயமடைந்தவர்களை வேறு வைத்தியசாலைகளுக்கும் அழைத்துச் சென்றுள்ளன.

ஈராக் சிவில் பாதுகாப்பு பிரிவின் தலைவர் மேஜ் ஜெனரல் காதிம் போஹன், அரச செய்தி நிறுவனமான ஐ.என்.ஏ.விடம் நுரையீரல் தீவிர சிகிச்சை பிரிவுக்கு நியமிக்கப்பட்ட தரையில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், மருத்துவமனையில் 120 பேரில் 90 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

ஈராக்கின் சுகாதார அமைப்பு, ஏற்கனவே பல தசாப்தங்களாக பொருளாதாரத் தடைகள், போர் மற்றும் புறக்கணிப்பு ஆகியவற்றால் பாழடைந்துள்ளது, கொரோனா வைரஸ் நெருக்கடியின் போது மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஈராக்கில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 02,5288 ஆகும், இதில் 15,217 இறப்புகள் உள்ளன என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.